தமிழ்நாடு

4 தலைமுறை சொந்தங்களுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய நெசவுத் தொழிலாளி

webteam

4 தலைமுறை குடும்பத்தினருடன் நெசவுத் தொழிலாளி 100 வது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் நல்லான் விநாயகம். நெசவுத் தொழிலாளியான இவருக்கு ஐந்து ஆண் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். தனது 85 ஆண்டுகள் வரை நெசவுத் தொழில் செய்து வந்த நல்லான் விநாயகம், முதுமையின் காரணமாக தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நல்லான் விநாயகம், 100 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவரது ஐந்து பிள்ளைகள் உட்பட 16 பேரன், பேத்திகள், பேரன்கள், பேத்திகள் பெற்றெடுத்த கொல்லு பேரன் பேத்திகள் 15 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் ஒன்று கூடி வீட்டில் அருகில் உறவுகளுடன் கேக் வெட்டி நல்லான் விநாயகத்தின் 100வது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். இதையடுத்து அனைவருக்கும் அசைவ உணவு பரிமாறப்பட்டது.