தமிழ்நாடு

சென்னை: கனமழையில் முறிந்த மரம், 10 நாட்களை கடந்தும் அகற்றப்படாமல் உள்ள அவலம்

சென்னை: கனமழையில் முறிந்த மரம், 10 நாட்களை கடந்தும் அகற்றப்படாமல் உள்ள அவலம்

நிவேதா ஜெகராஜா

சென்னை சின்னமலை பகுதியில் நவம்பர் 11, 12ம் தேதிகளில் பெய்த கனமழையில் சாலையில் முறிந்து விழுந்த மரம், இன்றுவரை அகற்றப்படாமல் இருப்பதால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சென்னை சின்னமலை பகுதியிலுள்ள செல்வ ரங்கராஜா தெருவின் நுழைவில் இந்த மரம் விழுந்திருக்கிறது. இந்த மரத்தால் வாகன ஓட்டிகள், சாலை கடப்போர், அச்சாலையிலேயே ஓரமாக நடந்துவரும் மக்கள் என எல்லோருமே பாதிப்புக்குள்ளாகிவருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்துக்கு மிக அருகிலேயே நான்கு வழிச்சாலைகள் இணையும் ஒரு சந்திப்பும் இருக்கிறது. ஆளுநர் மாளிகையும் இங்கிருந்து பக்கமென்பதால், போக்குவரத்து அதிகமிருக்கும் இடம் இது. இவற்றை கருத்தில் கொண்டாவது விரைந்து மாநகராட்சி ஊழியர்கள் இம்மரத்தை அப்புறப்படுத்தி சரிசெய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.