அடித்துச் செல்லப்பட்ட தண்டவாளம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தூத்துக்குடி - அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்... நடுவில் சிக்கிக்கொண்ட ரயில் - பயணிகளின் நிலை என்ன?

தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளம் அருகே பெய்த கனமழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டு தண்டவாளம் அந்தரத்தில் தொங்குகிறது. இதையடுத்து ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

webteam

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்செந்தூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு ட்ரை வீக்லி விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது.

heavy rain

அப்போது தாதன்குளம் அருகே வந்தபோது, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. இந்த ரயிலில் 800-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்த நிலையில், 300 பயணிகள் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 500 பேர் ரயில் பெட்டியிலேயே உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.

ரயிலின் முன்புறம் பின்புறம் உள்ள தண்டவாளம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இரவில் இருந்து ரயில் நகர முடியாமல் தாதன்குளம் அருகே நின்று கொண்டிருக்கிறது. இத்தகவலை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.