Blue moon pt desk
தமிழ்நாடு

சென்னையில் தென்பட்டது 'சூப்பர் நீல நிலவு' - முழுமதியை ரசித்து மகிழ்ந்த பொதுமக்கள்!

உலகம் முழுவதும் தென்பட்ட சூப்பர் நீல நிலவினை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

webteam

புவிக்கு மிக அருகில் நிலவு இருப்பது சூப்பர் நிலவு என்று கூறப்படும். அதுவும் பௌர்ணமி அன்று தென்பட்டால், அதுவே சூப்பர் நீல நிலவு என்று வானியல் அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 3 நாட்களுக்கு சூப்பர் நிலவு தெரியும் என்று நாசா தெரிவித்தது. இதனை வெறும் கண்களால் பார்வையிட முடியும் என்றும், அறிவியலாளர்கள் தெரிவித்தனர். முதல் நாளே பௌர்ணமி என்பதால், சூப்பர் நீல நிலவாக உலகின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது.

Super blue moon

சென்னையில் சூப்பர் நீல நிலவை ஏரானமானோர் கண்களித்தனர். இதேபோல், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சூப்பர் நீல நிலவினை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். தென்கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் சூப்பர் நீல நிலவு தென்பட்டது. இதனை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.