தமிழ்நாடு

10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!

10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!

JustinDurai

தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர் விண்வெளி வீராங்கனை பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான நிதி இன்றி தவித்து வருகிறார்.

ரத்தினம் நகரைச் சேர்ந்த உதய கீர்த்திகா, போலந்து விண்வெளி பயிற்சி மையத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்தப் பயிற்சிக்கு தேவையான பண உதவி இல்லாமல் தவித்து கொண்டிருந்தார். அது குறித்து புதிய தலைமுறையில் வெளியானதை அடுத்து அவருக்கு ஏராளமானோர் நிதி உதவி செய்தனர். இதனையடுத்து போலந்தில் 10 கட்ட பயிற்சியினை முடித்து விட்ட அவருக்கு மீண்டும் பணம் தடையாக அமைந்துள்ளது.

தற்போது 11 ஆவது கட்டமாக கனடாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர அனுமதி கிடைத்துள்ள நிலையில், அங்கு செல்ல சுமார் ரூ.50 லட்சம் வரை தேவை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் தன் விண்வெளிக் கனவு பயணத்தை தொடர ஆர்வலர்களின் உதவியை உதய கீர்த்திகா எதிர்பார்த்து காத்துள்ளார்.

விண்வெளியில் இருக்கும்போது எவ்வாறு நடந்து கொள்வது, விண்வெளியில் எவ்வாறு தரையிறங்குவது, எந்த இடத்தை தரையிறங்க தேர்வு செய்வது, விண்வெளியில் இருக்கும் சமயங்களில் உடல்நிலையை எவ்வாறு சீராக வைத்து கொள்வது, மேலும் ராக்கெட்டில் பழுது ஏற்பட்டால் அதனை எவ்வாறு சரி செய்வது, இதற்கு முன்னோட்டமாக விமானத்தை எவ்வாறு இயக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் கனடாவிலுள்ள பயிற்சி மையத்தில் வழங்கபட உள்ளன.

இந்தப் பயிற்சியினை முடித்த பின்னர் அடுத்த கட்ட பயிற்சிகளுக்குப் பிறகு, விண்வெளி வீராங்கனையாக தேர்வு செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த நிலையில்தான், இந்தப் பயிற்சியில் சேருவதற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை தேவைபடும் நிலையில், இந்தப் பயிற்சியினை பெற பணம் இல்லாமல் தவித்து வருகிறார் உதய கீர்த்திகா. தன்னுடைய பயிற்சிக்கு யாராவது உதவி செய்யும் பட்சத்தில் கல்பனா சாவ்லாவிற்கு பிறகு இந்தியாவில் ஒரு விண்வெளி வீரங்கனையாக வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என கூறுகிறார் இந்த மாணவி.

இவருக்கு உதவி செய்ய விரும்புவோருக்கு...

Name : D. UdhayaKeerthika

A/C No: 34887879066 (Savings Bank)

Bank: State Bank of India

Branch: Theni

IFSC Code: SBIN0002277

Cell Number:  9626850509