செம்பரம்பாக்கம் ஏரி ட்விட்டர்
தமிழ்நாடு

புயலுக்கு முன்பே செம்பரம்பாக்கத்தில் நீர் வெளியேற்றியதால் பெரிய சேதம் தவிர்ப்பு; தரவு சொல்லும் தகவல்

மிக்ஜாம் புயல் அதிக மழையைக் கொடுக்கும் என்கிற எச்சரிக்கையை உணர்ந்து, செம்பரம்பாக்கத்தில் புயலுக்கு முன்பே நீர்மட்டத்தை அதிக அளவு வெளியேற்றியதுதான் வெள்ளசேதத்தை குறைத்ததற்கு காரணமாக அமைந்துள்ளது.

Prakash J

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் அதிக மழையைக் கொடுக்கும் என்கிற எச்சரிக்கையை உணர்ந்து, செம்பரம்பாக்கத்தில் புயலுக்கு முன்பே நீர்மட்டத்தை அதிக அளவு வெளியேற்றியதுதான் வெள்ளசேதத்தை குறைத்ததற்கு காரணமாக அமைந்துள்ளது.

தரவுகளின்படி, டிசம்பர் 3ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடி அளவில் 2769 மில்லியன் கனஅடி அளவு மட்டுமே (76%) மட்டுமே இருப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

தரவுகளின்படி, டிசம்பர் 3ஆம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடி அளவில் 2769 மில்லியன் கனஅடி அளவு மட்டுமே (76%) மட்டுமே இருப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

5ஆம் தேதி அதிகபட்சமாக 10,000 கனஅடி வரை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. ஒருவேளை, ஏரியின் கையிருப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில், மேலும் அதிக அளவு உபரிநீரைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.

மிக்ஜாம் புயலின்மூலம் கிடைத்த மழையால் 3ஆம் தேதி 76% என இருந்த கொள்ளளவு, 6ஆம் தேதி 95% என அதிகரித்தது. அதிகபட்சமாக 10,000 கனஅடி நீரை திறந்ததற்கே சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டையில் பல வீடுகளுக்குள் நீர் புகுந்தநிலையில், மேலும் அதிகரிக்கப்பட்டிருந்தால், சேதாரம் மேலும் அதிகமாகி இருக்கலாம் என்பது தரவுகள் மூலம் தெரிய வருகிறது.

மிக்ஜாம் புயலின்மூலம் கிடைத்த மழையால் 3ஆம் தேதி 76% என இருந்த கொள்ளளவு, 6ஆம் தேதி 95% என அதிகரித்தது.