தமிழ்நாடு

தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு - அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்

தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு - அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்

webteam

தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு நடத்தும் கன்னியாகுமரி காவலர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய தேவைகளை மீறி வீடுகளை விட்டு வெளியே வருபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி நூதன தண்டனைகளையும் வழங்கி வருகின்றனர்.

தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு போலீசார் 10 கேள்விகள் கொண்ட தேர்வு ஒன்றை நடத்துகின்றனர். கொரோனா குறித்த கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தால் ஒரு பதிலுக்கு 10 தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் கேள்வித்தாளில் குறிப்பிட்டுள்ளனர். சட்டத்தை மீறுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் விநோத தண்டனை அளிக்கும் கன்னியாகுமரி போலீசாருக்கு வரவேற்பு குவிந்துள்ளது.

அதேபோல், நேற்றிரவு குளச்சல் உட்கோட்ட பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் சுற்றித்திரிந்த இளைஞர்களின் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறிய போலீசாருக்கும் வரவேற்பு குவிந்து வருகிறது.