திருவள்ளூர்: சரக்கு ரயில் - பயணிகள் ரயில் விபத்து புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருவள்ளூர்: சரக்கு ரயில்மீது மோதிய பயணிகள் ரயில்... உயிரிழப்பு இல்லை! விபத்துக்கு என்ன காரணம்?

திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

PT WEB

திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்துள்ளது. அப்போது மைசூரு தர்பங்கா எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயிலானது நேராக சென்று சரக்கு ரயில்மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்பு இல்லை.

சரக்கு ரயிலும் பயணிகள் ரயிலும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில் நல்வாய்ப்பாக மக்களுக்கு ஆபத்து இல்லை எனக்கூறப்படுகிறது. உயிரிழப்புகள் எதுவும் இல்லை. இதுவரை 6 பெட்டிகள் சேதமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அருகிலுள்ள கிராம மக்கள் மீட்பு பணியில் கைக்கோர்த்து வருகின்றனர். ஆகவே ரயிலில் இருந்த அனைவரும் விரைவில் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. NDRF வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வருகின்றனர்.

விபத்துக்கு என்ன காரணம்?

தவறான சிக்னல் காரணமாக ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது இரவு 8.27 மணியளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயில் இயக்கப்பட்டதாகத் தெரிகிறது; 109 கி.மீ வேகத்தில் சென்ற ரயிலை லூப் லைனில் செல்லும்போது 90 கி.மீ வேகத்திற்கு ஓட்டுநர் குறைத்துள்ளார். அப்போது பிரதான லைனில் இருந்து லூப் லைனிற்கு சென்றபோது நின்றுக் கொண்டிருந்த சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விவரங்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...