தமிழ்நாடு

கழுத்தில் கத்தி.. விவசாய நிலத்தில் முகமூடி கொள்ளையனுடன் துணிச்சலோடு போராடிய பெண்!

கழுத்தில் கத்தி.. விவசாய நிலத்தில் முகமூடி கொள்ளையனுடன் துணிச்சலோடு போராடிய பெண்!

webteam

வத்தலகுண்டு அருகே பூ பறித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 13 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே மல்லனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர், தற்போது பூ விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் சபரிமலைக்கு சென்றிருந்த நிலையில், அவரது மனைவி சுமதி தோட்டத்தில் அரளி பூ பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது முகமூடி அணிந்து பின்னால் வந்த மர்ம நபர் கையில் இருந்த கத்தி எடுத்து சுமதியின் கழுத்தில் வைத்து மிரட்டி செயினை பறிக்க முயன்றுள்ளார். அப்போது கத்தியை பிடித்துக் கொண்ட சுமதி, முகமூடி கொள்ளையனுடன் போராடியுள்ளார். அப்போது அந்த கொள்ளையன் சுமதியின் கையை கத்தியால் வெட்டிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி உள்ளார்.

இதையடுத்து சுமதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்த போதிலும் மின்னல் வேதத்தில் கொள்ளையன் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்து சுமதி அளித்த புகாரின் அடிப்படையில் நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பியோடிய முகமூடி கொள்ளையனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.