தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம் ! யானை தாக்கியதில் ஒருவர் பலி

தூங்கிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம் ! யானை தாக்கியதில் ஒருவர் பலி

webteam

போடி தேவாரம் பகுதி விவசாயி ஒருவர் தோட்டத்தில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் பொழுது ஒற்றை காட்டு மக்னா யானை தாக்கி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பிரம்புவெட்டி ஓடையில் உள்ள தோட்டப் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி சேகர்.அவர் நேற்று இரவு முழுவதும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.  இன்று அதிகாலை  அங்கு வந்த மக்னா ஒற்றையானை விவசாயி சேகரை தாக்கியது. அதில் அவர் வயிற்று பகுதியில் மிதித்ததோடு 10அடி தூரத்திற்க்கு இழுத்து சென்று காலால் மிதித்து கொன்றுள்ளது. இதனதொடர்ந்து அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

சம்பவ தினமான இன்று அதிகாலை அந்த பகுதியாக வந்த சிலர் சேகர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த ஒற்றை காட்டு மக்னா யானையை வனப்பகுதிக்குள் விரட்டும்படி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

இதுவரை மக்னா யானை, ஒன்பது பேரை கொன்றும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கிராமமக்கள் சேகரின் உடலை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.