தமிழ்நாடு

“என் 800 ரூபாய் செருப்பைக் காணோம்” - காவல்நிலையத்தில் ஒருவர் புகார்

“என் 800 ரூபாய் செருப்பைக் காணோம்” - காவல்நிலையத்தில் ஒருவர் புகார்

webteam

சென்னை தண்டையார்பேட்டையில் தனது செருப்பைக் காணவில்லை என தொழிலதிபர் ராஜேஸ்குப்தா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

சென்னை தண்டையார்பேட்டை இளைய தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை சேர்ந்தவர் ராஜேஸ்குப்தா. இவர் பாரிமுனை பகுதியில் ஹார்டுவேர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சர்க்கரை நோய் பரிசோதனை மையத்திற்கு சென்றபோது பரிசோதனை மையத்தின் வாசலில் தன்னுடைய 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பை கழற்றி வைத்து சென்றுள்ளார். 

இதனைத்தொடர்ந்து ராஜேஸ்குப்தா பரிசோதனை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வாசலில் விட்டு சென்ற 800 ரூபாய் மதிப்புள்ள செருப்பு மாயமாகி இருந்தது. உடனடியாக செருப்பு மாயமானது தொடர்பாக ராஜேஸ்குப்தா தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று கொண்ட காவல்துறை அதிகாரிகள் செருப்பு மாயமானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொலைக்காட்சியில் வரும் செருப்பு விளம்பரத்தை போல தண்டையார்பேட்டை பகுதியில் செருப்பு மாயமானது தொடர்பாக காவல்துறையினர் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.