Telegram image twitter
தமிழ்நாடு

சென்னை| டெலிகிராம் ஆப் வழியே சிறார் ஆபாச படங்களை இணையத்தில் விற்பனை செய்த வாலிபர் கைது

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் டெலிகிராம் ஆப் இல் சிறார் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

ஜெ.அன்பரசன்

சிறார் ஆபாச படங்கள் பார்ப்பது குற்றம் என்று இருக்கையில், சிறார் ஆபாச படங்களை விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலிசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் டெலிகிராம் ஆப் இல் சிறார் ஆபாச படங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இதன் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர்

இந்த நிலையில் சென்னை மணலி சின்ன சேக்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்ற வாலிபர் சிறார் ஆபாச படங்களை டெலிகிராம் ஆப் இல் 100 சிறார் ஆபாச படங்கள் 100 ரூபாய்,250 வீடியோ - 150,1000 வீடியோ -200 ரூபாய் என விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவனை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் அவனிடம் 2 செல்போன் பறிமுதல் செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.