தமிழ்நாடு

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க ஆடிப்பாடி பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை

மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க ஆடிப்பாடி பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை

kaleelrahman

நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்க ஆசிரியர் நடனமாடி பாடம் நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகள் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், மாணவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டாலும் நேரடி வகுப்புகள்போல் இல்லை.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நான்கு வாரத்திற்கு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் கவிதா என்ற ஆசிரியை, மாணவர்களுக்கு எளிதில் எழுத்துகளை நினைவூட்டும் வகையில், தமிழ் எழுத்துகளை பாடல் மெட்டில் ஆடிப்பாடி பயிற்றுவிக்கிறார்.

இதையடுத்து குழந்தைகளும் ஆசிரியர் சொல்படி நடனமாடி தமிழ் எழுத்துகளை கற்று வருகின்றனர். இப்படி வித்தியாசமான முறையில் பாடம் நடத்துவது மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.