தமிழ்நாடு

தங்கத்தமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் !

தங்கத்தமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் !

webteam

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை விமர்சித்த தங்கத்தமிழ்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சம்மன் அனுப்பியுள்ளார்.

பணம் பெற்று தீர்ப்பு வழங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்தது குறித்து நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கமளிக்க தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சம்மன் அனுப்பியுள்ளார். அவரது தரப்பில் இருந்து  இரண்டு வாரங்களில் நேரிலோ, வழக்கறிஞர் மூலமாகவோ விளக்கமளிக்க வேண்டும்  தங்கத்தமிழ்செல்வன் அளிக்கும் விளக்கத்தில் திருப்தி இல்லாவிட்டால்  நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை தொடர நீதிமன்றத்திற்கு அரசு தலைமை வழக்கறிஞர் பரிந்துரைப்பார் என நீதிமன்ற வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தங்கத்தமிழ்ச்செல்வன் மீது கிரிமினல் அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கறிஞர் ஸ்ரீமதி தொடர்ந்த வழக்கில் பேரில் அரசு தலைமை வழக்கறிஞரின் சம்மன் அனுப்பியுள்ளார். இந்த தீர்ப்பு குறித்து ஊடகங்களின் அளித்த பேட்டியின் போதும், விவாதத்தின் போது பணம் பெற்று தீர்ப்பு வழங்கியதாக சென்னை உயர் நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதியையும் விமர்சித்தார். தங்கத்தமிழ்செல்வனின் பேச்சு நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாகும் என நெறியாளர்கள் எச்சரித்த நிலையிலும், எந்த விதமான நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார் எனவும் அவர் தெரிவித்தார். என்று வழக்கறிஜர் ஸ்ரீமதி தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். அதனால், 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,சபாநாயகரின் உத்தரவுச் செல்லும் என்றும், செல்லாது என்று நீதிபதி சுந்தரும் மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.