காற்றழுத்த தாழ்வு பகுதி புதியதலைமுறை
தமிழ்நாடு

”அரபி கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!

தென்கிழக்கு மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிகள் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தென்கிழக்கு, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிகள் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்தியவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழலை ஏற்படுத்தும் என்றும், வரும் ஒன்பதாம் தேதி அரபி கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக கிழக்கு திசை காற்று தமிழகத்தினுடையே செல்ல வாய்ப்பு என்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமர குருபன் உள்ளிட்ட மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அக்டோபர் 10ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க கடந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் வடகிழக்கு பருவமழை முன் கூட்டியே தொடங்க உள்ள நிலையில் விரைவாக எடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.