தமிழ்நாடு

''சசிகலா உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

''சசிகலா உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

webteam

சிறையில் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார். சசிகலா விடுதலையாக வெகு சில நாட்களே உள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தனது புகாரில் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்



சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, வரும் 27-ஆம் தேதி விடுதலையாகிறார். ஒரு வாரத்தில் விடுதலையாக உள்ள சூழலில், நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, சசிகலா பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலா உடல்நிலை குறித்து பேசிய தினகரன், "சசிகலா நலமாக உள்ளார். அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்