தமிழ்நாடு

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் புகாா்

webteam

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறவர் சமுதாய மக்கள் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி அலுவலகத்தில் வனவேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் குறவர் சமுதாயத்திற்கு தமிழக அரசிடம் சமூக பிரதிநிதித்துவம் வேண்டி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனு ஒன்றை கடந்த 23 ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்தாகவும் இரணியன் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரனை சந்தித்த போது, தங்களை நாற்காலியில் அமர வைக்காமலும், தங்களை ஒருமையில் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் அமைச்சரை நெருங்கி மனுவின் சாராம்சத்தை கூற முயன்ற போது, தள்ளியே நின்று பேசு என தீண்டாமை செயலில் ஈடுபட்டதாகவும் இரணியன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தங்களின் சாதியை காரணம் காட்டி தீண்டாமை செயலில் ஈடுபட்ட கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரணியன் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: "விலக்கு அளிக்கும் பிரிவில் ஈஷா மையம் எப்படி வந்தது?" - மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி