டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு web
தமிழ்நாடு

செங்கல்பட்டு | டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே 6 வயது சிறுதி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் தேவராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுரு, இவரது மனைவி அலமேலு, இவர்களின் இளைய மகள் யாத்திகா செய்யூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை காய்ச்சல் அதிகரித்ததால் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த பரிசோதனை செய்து பார்த்தபோது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..

இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி யாத்திகா உயிரிழந்தார்.

டெங்கு

சிறுமி உயிரிழப்பால் அந்த கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம் முறையாக கொசு மருந்து பீச் பவுடர் உள்ளிட்ட சுகாதார பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாதது காரணம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.