ஆசிரியம் கல்வெட்டு pt desk
தமிழ்நாடு

சிவகங்கை அருகே கண்டறியப்பட்ட 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அடுத்த விட்டனேரியில் காட்டுப்பாதையை சுத்தம் செய்யும்போது, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த தொல்லியல் நடை குழுவினர் கல்வெட்டை ஆய்வு செய்தனர். 3 அடி உயரத்திலும், ஒன்றரை அடி அகலத்திலும் உள்ள இந்த கல்வெட்டு, ஆசிரியம் வகையைச் சேர்ந்தது எனத் தெரிவித்தனர்.

ஆசிரியம் கல்வெட்டு

ஒரு குறிப்பிட்ட குழுவினர் கிராமத்தை காவல் காப்பது பற்றிய அறிவிப்பு இடம் பெறுவது ஆசிரியம் கல்வெட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. இந்த அரிய வகை கல்வெட்டில், ஒரு பக்கத்தில் 12 வரிகளும், மறுபக்கத்தில் 9 வரிகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதை சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.