தமிழ்நாடு

ஈரோடு: செல்போனில் படிக்காமல் படம் பார்த்ததால் திட்டிய தந்தை - மகள் எடுத்த விபரீத முடிவு.!

ஈரோடு: செல்போனில் படிக்காமல் படம் பார்த்ததால் திட்டிய தந்தை - மகள் எடுத்த விபரீத முடிவு.!

webteam

செல்போனில் படிக்காமல் படம் பார்த்ததாக தந்தை திட்டியதால் மனமுடைந்த மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்காக மாணவர்கள் செல்போன், கம்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் ஹேமமாலினி என்ற மாணவி செல்போனில் பாடங்கள் படிக்காமல் படங்களை பார்ப்பதாக அவரது பெற்றோர் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி பெற்றோர் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஹேமமாலினியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்த பெற்றோர் மகள் தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060