தமிழ்நாடு

10 வயது சிறுவன் உருவாக்கிய செயற்கைகோள்

10 வயது சிறுவன் உருவாக்கிய செயற்கைகோள்

webteam

சென்னை அருகே சிறுசேரியில் உள்ள தனியார் விண்வெளி ஏவுதளத்திலிருந்து என்எஸ்எல்வி 7 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும், தனியார் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய என்எஸ்எல்வி கிரெசன்ட் சாட் செயற்கைக் கோள் இதுவாகும். இந்த செயற்கைக் கோளின் பேலோடை, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் சப் ஜூனியர் டீம் லீட் மாஸ்டர் பிரதிக் உருவாக்கியிருந்தார். விண்வெளியில் நிலவும் வெப்ப நிலை குறித்து இந்த செயற்கைக் கோள் கண்காணிக்கும்.

செயற்கைக் கோள் செலுத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்ரோவின் அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன் கலந்து கொண்டார்.

இந்த பலூன் செயற்கைக்கோள் பாராசூட் மற்றும் பேலோடுடன் இணைத்து செலுத்தப்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஸ்பேஸ் போர்ட் இந்தியா என்ற தனியார் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்டது.

விண்ணில் உள்ள வெப்ப நிலை ஆராய்வது, மேல் வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயுக்கள் குறித்து அறிதல், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து ஆய்வது, மருத்துவத் துறையில் ரிமோட் சென்சிங் பயன்பாடு, பசுமைப் படலத்தின் அடர்த்தியை அறிவது என பல பயன்பாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும்.