புதுக்கோட்டையில் 9ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரை அடுத்துள்ள கவிநாடு கம்மாய் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த கம்மாய் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த பகுதியில் தனியார் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டபோது 9ம் நூற்றாண்டில் உள்ள சமணர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. 3 துண்டுகளாக உடைந்து கிடந்த அந்த சிலையை ஒன்றாக இணைந்துள்ள தொல்லியல் ஆய்வு கழகத்தினர், அதனை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.