தமிழ்நாடு

கண்களை கட்டிக்கொண்டு 35 கி.மீ சைக்கிள் பயணம் - 9 வயது சிறுவன் சாதனை..!

கண்களை கட்டிக்கொண்டு 35 கி.மீ சைக்கிள் பயணம் - 9 வயது சிறுவன் சாதனை..!

webteam

பட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு 35 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி 9 வயது சிறுவன் சாதனை படைத்தார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிவ் (9). இவர் கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இந்த மாணவன் பலமுறை கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் முயற்சிகளை மேற்கொண்டு பயிற்சி எடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து கண்களை கட்டிக் கொண்டு பட்டுக்கோட்டை நகரம் மற்றும் புறவழிச் சாலை வழியாக பேராவூரணி சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு சுமார் 35 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து திருச்சிற்றம்பலத்தில் முடித்தார்.

20 கிலோமீட்டர் இலக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர் 35 கிலோமீட்டர் கண்களை கட்டிக் கொண்டு மிதி வண்டி ஓட்டி சாதனை படைத்தது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. சிறுவனின் இந்த சாதனையை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது.