தமிழ்நாடு

9 கிலோ தங்க வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று இரவு 9 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட வாகனத்தில் மலையப்ப சுவாமியின் வீதி உலா நடைபெற்றது.

புதியதாக செய்யப்பட்ட சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உலகத்தில் உள்ள மன்னர்களுக்கு எல்லாம் மன்னர் தானே என்பதை உணர்த்தும் விதமாக பிரம்மோற்சவத்தின் நான்காவது நாளான நேற்று ஏழுமலையான் கோயில் கோபுர வடிவிலான தங்க சர்வ பூபால வாகனத்தில் நாரையாக வந்த அசுரனை வதம் செய்யும் விதமாக ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சர்வ பூபால வாகனத்தில் சுவாமியை தரிசனம் செய்வதால் வாழ்கையில் அகங்காரத்தை ஒழியும் என்பதும் நிரந்தரமான பலன் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

சுவாமி வீதி உலாவின் போது நான்கு மாடவீதியில் திரண்டு இருந்த பல்லாயிரகனக்காண பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி மனம் உருகி சுவாமியை வேண்டி கொண்டனர். இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கோலாட்டம், பஜனை, பல்வேறு வேடம் அணிந்த பக்தர்களின் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.