தமிழ்நாடு

வாட்டும் வறுமை: 80 வயதில் நுங்கு விற்கும் வில்லிசைக் கலைஞர்; அரசு உதவ கோரிக்கை

வாட்டும் வறுமை: 80 வயதில் நுங்கு விற்கும் வில்லிசைக் கலைஞர்; அரசு உதவ கோரிக்கை

Sinekadhara

45 ஆண்டுகளுக்கு மேலாக வில்லிசைக் கலைஞராக இருந்தவர், குடும்பத்தின் அரவணைப்பு இல்லாததால் நுங்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மேலக்கரந்தையைச் சேர்ந்தவர் குருசாமி. 45 ஆண்டுகளுக்கு மேலாக வில்லிசைக்குழுவில் உடுக்கை வாசிப்பாளராக இருந்த இவருக்கு தற்போது வயது 80. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் வாசித்து பாராட்டுப்பெற்ற குருசாமிக்கு, பல்வேறு அமைப்புகள் விருதுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் கொடுத்துள்ளன.

அது எதுவுமே குருசாமிக்கு தற்போது கைகொடுக்கவில்லை. வயோதிகம் காரணமாக வில்லிசைக்குழுவில் வாசிக்கமுடியாத சூழலில், அன்றாட வயிற்று பசியைப்போக்க நுங்கு விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். தனக்கு நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகையை வழங்கி அரசு உதவவேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.