திருச்சி மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விற்பனைக்கு வரவுள்ளது.
திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகளால் தயாரிக்கப்படும் பொருள்கள் சிறை வளாகத்தில் உள்ள அங்காடி மூலமாக விற்கப்பட்டு வருகிறது. சிறைக்குள் பல்வேறு பொருள்களை தயாரித்து வரும் கைதிகள், விவசாயமும் செய்து வருகின்றனர். அவ்வாறு சிறையில் பயிரிடப்பட்ட கரும்புகள், பொங்கல் திருவிழாவையொட்டி விற்பனைக்கு வந்தன.
இந்நிலையில், இயற்கை முறையில் சின்ன வெங்காயத்தை கைதிகள் பயிரிட்டு, தற்போது அறுவடை செய்துள்ளனர். அவ்வாறு கைதிகளால் விளைவிக்கப்பட்ட சுமார் 80 கிலோ வெங்காயம் விரைவில் சிறை அங்காடியில் விற்பனைக்கு வரவுள்ளது. 80 சதவீத இயற்கை முறையில் சின்ன வெங்காயம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் 100 சதவீத இயற்கை முறையில் விளைவிக்கப்படுமெனவும் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்