தமிழ்நாடு

சிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

சிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை

rajakannan

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி (55) என்பவர் திருப்பூரில் தங்கி ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் பகுதியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, அணைக்காடு கார்த்தி கார்டன் பகுதியில் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார். 

இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை  விசாரித்த திருப்பூர் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, குற்றவாளி ரவிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து ரவியை கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.