தெருநாய்க்கடி கோப்புப்படம்
தமிழ்நாடு

தென்காசி | 10க்கும் அதிகமான தெருநாய்கள் கடித்ததில், எட்டு வயது சிறுமி படுகாயம்!

தென்காசி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்ததில், 8 வயது சிறுமி படுகாயம் அடைந்த சூழலில், சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

செய்தியாளர்: சுந்தர மகேஷ்

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் பகுதியில் உள்ள 12 ஆவது வார்டு பகுதியில் காளிராஜ் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு 8 வயதில் மனிஷா என்ற மகள் உள்ளார். இவர்களின் வீட்டிற்கு எதிரே தோட்டமும் உள்ளது. அங்கு இன்று காலை விளையாடி கொண்டிருந்துள்ளார் மனிஷா.

அப்போது, அப்பகுதியில் உள்ள 10 மேற்க்கும் மேற்பட்ட தெருநாய்கள் மனிஷாவை கடித்துள்ளன. சிறுமி இதில் வெகுதூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளார். சிறுமி நாய்களால் தாக்கப்பட்டதை கண்ட சிறுமியின் உறவினர் ஒருவர், அந்த நாய்களை விரட்டி அடித்து சிறுமியை மீட்டுள்ளார்.

தற்போது, சிறுமி மனிஷா படுகாயமடைந்த நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாகவே, இப்பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை காரணமாக பல முறை மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் அளித்துள்ளனர். இருப்பினும் தற்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்ல என்று தெரிகிறது.

தெருநாய்களால் படுகாயம் அடைவதும், அப்பாவி குழந்தைகள் அதற்கு பலியாவதும் இது முதல் முறை அல்ல. இது போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. நடைபெறாமல் இருக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம்தான் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் மக்கள்.