விழுப்புரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தென்நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் கோமதி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு 9 மற்றும் 7 வயது முறையே இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் கோமதி புதுச்சேரியில் வேலைக்கு சென்ற இடத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதனால் தனது முதல் கணவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளையும் சரிவர கவனிப்பதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் இரண்டு பெண் குழந்தைகளையும் தென் நெற்குனத்தில் உள்ள தனது தாய் பழனியம்மாள் வீட்டில் அவரது பராமரிப்பில் விட்டுள்ளார் கோமதி. இந்நிலையில் கோமதியின் சகோதரர் என்ற அடிப்படையில் வரும் உறவினரும் அவரின் நண்பர்களுடம் சேர்ந்து இரு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
பள்ளிக்கு சென்ற குழந்தைகளின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு ஆசிரியர் மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது இரண்டு சிறுமிகளும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. மேலும் ஆசிரியர் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிற்கும் தகவல் அளித்தார்.
இதையடுத்து பிரம்மதேசம் போலீசார் சிறுமிகளின் உறவினர் உட்பட 10 பேரின் மீது வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். 10 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.