தமிழகம் முழுவதும் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் பேசிய அவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சுமார் 200 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 25 பேருக்கு டெங்குக் காய்ச்சல் உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் 35 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். மேலும், போதிய படுக்கை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என நோயாளிகள் கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.