தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை: பள்ளிக் கல்வித்துறை தகவல்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரிக்கை: பள்ளிக் கல்வித்துறை தகவல்

webteam

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது

கொரோனா பொதுமுடக்கத்திற்குப் பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய சூழலில் பள்ளிகளை திறக்கக்கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க , மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

அதன்படி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் கோரியதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த முறை கேட்கப்பட்ட கருத்துக்கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்த முறை பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க கோரியாதாக தெரிகிறது.