குற்றவாளி பச்சையப்பன் pt desk
தமிழ்நாடு

விழுப்புரம்: மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு - கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

webteam

திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகள் ஷாலினி (24) என்பவருக்கும், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டையை சேர்ந்த பச்சையப்பன் (36) என்பவருக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களில் இருந்தே பச்சையப்பனும், அவரது தாய் பத்மினியும் சேர்ந்து ஷாலினியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதன் காரணமாக அவர், கடந்த 5.12.2020 அன்று தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்

இதுகுறித்து ஷாலினியின் தந்தை சேகர், அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் ஷாலினியை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் பச்சையப்பன் மற்றும் மாமியார் பத்மினி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரனை விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கிய ஜோதி, குற்றம் சாட்டப்பட்ட பச்சையப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பத்மினியை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட பச்சையப்பன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.