கன்னியாகுமரி மாவட்டம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரி | கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுமி மீட்கப்படுவாரா? காத்திருக்கும் உறவினர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று தந்தையுடன் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட சிறுமி, கடல் சீற்றம் காரணமாக தற்போது வரை மீட்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

கன்னியாகுமரி மாவட்டத்தில், தேங்காய்பட்டினம் பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு சென்ற தந்தை மற்றும் மகள் கடல் அலையில் நேற்று இழுத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், தந்தையை அருகில் இருந்த மீனவர்கள் மீட்டனர். ஆனால், அவரின் 7 வயது மகள் தற்போது வரை மீட்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் மற்றும் கடலோர காவல்துறையினர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சிறுமியை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும், இரண்டு படகுகளில் மீனவர்கள் சிறுமியை மீட்பதற்காக தயாராக உள்ள நிலையிலும், கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், சிறுமியை மீட்க முடியாத நிலை உள்ளது. கடல்சீற்றம் குறைந்தால்தான் கடலில் இறங்கி சிறுமியை மீட்க முடியும் என்று கூறப்படுகிறது.

எப்படியாவது சிறுமி மீட்கப்படுவார் என்ற எதிர்ப்பார்பில் நேற்று முதலே கடற்கரையில் சிறுமியின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் மிகுந்த சோகத்துடன் காத்திருகின்றனர்.