தமிழ்நாடு

7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா ‌பாண்டியராஜன்

7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா ‌பாண்டியராஜன்

webteam

ஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள அருங்காட்சியத்தில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், ஆஸ்திரேலிய தூதர் சூசன் கிரேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், கேன்பரா நகரில் உள்ள நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்திலுள்ள 7 சிலைகளையும் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அந்த 7 சிலைகள் குறித்தும் கடந்த 1958, 67 மற்றும் 74ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்து ஆஸ்திரேலிய அரசிடம் சமர்ப்பித்ததையடுத்து அந்தச் சிலைகளை தமிழகத்திற்கு வழங்க ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.