தமிழ்நாடு

கோயம்பேடு சந்தை மூலம் பரவிய கொரோனா.. கடலூரில் மேலும் 68 பேருக்கு பாதிப்பு

கோயம்பேடு சந்தை மூலம் பரவிய கொரோனா.. கடலூரில் மேலும் 68 பேருக்கு பாதிப்பு

webteam

சென்னை கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 228 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “ கொரோனா தொற்று நமக்கு பரவிவிடும் என மக்கள் அச்சப்பட வேண்டாம். அறிகுறி இருப்பவர்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுக்கப்படுகிறது. கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதியான 197 பேருக்கும் எதிர்ப்பு சக்திக்கான உணவுகள், மருந்துகள் வழங்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.