தமிழ்நாடு

தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு - நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு - நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Sinekadhara

தமிழகத்திற்கு 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சை, மருந்துகள் மற்றும் படுக்கை இருப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கும் வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மத்திய அரசு வழக்கறிஞர், ’’ஏற்கெனவே தமிழகத்திற்கு 420 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. ஆனால் ஆக்சிஜன் தேவையை கருத்தில்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்திற்கு ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததில் பேரில், அது 519 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது. தற்போது ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 650 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மேலும் மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்களும் மருத்துவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது குறித்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.