நீரை அகற்றும் பணியில் 620 பம்புகள் உள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னையில் இன்னும் 93 இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன, 620 பம்புகள் நீரை அகற்றும் பணியில் உள்ளன. 18,000 கன அடி நீர் திறப்பால் மணலியில் சில பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. நாளைக்குள் இது சரிசெய்யப்படும்.
மாஸ் கிளீனிங் மேற்கொள்வதற்காக பிற மாவட்டங்களில் இருந்து நாளை 500 துப்புரவுப் பணியாளர்கள் சென்னையில் பணியில் ஈடுபட உள்ளனர். மாநகராட்சியின் 3400 ஊழியர்களும் நாளை கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இல்லையெனில் வரும் வாரத்தில் கொசுக்களால் கடும் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும். சில நாட்களாக மழையால் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறவில்லை” என தெரிவித்தார்.