தமிழ்நாடு

“தேச ஒற்றுமைக்கு எதிராக செய்திகள் வெளியிட்ட 60 யூடியூப் சேனல்கள் முடக்கம்” - எல். முருகன்

Sinekadhara

2 தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கே.சி. வேணுகோபால், நாட்டில் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுவதாக தெரிவித்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் பதிலளித்து பேசுகையில், "தேச ஒற்றுமைக்கும், தேசப் பாதுகாப்புக்கும் எதிராக செய்திகள் வெளியிட்டதற்காக கடந்த 2 மாதங்களில் மட்டும் 60 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன.

இது தவிர, பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்களும், ட்விட்டர், பேஸ்புக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. அந்த வகையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன" எனக் கூறினார்.