தமிழ்நாடு

காலை 6 டூ இரவு 10: இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை!

காலை 6 டூ இரவு 10: இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை!

webteam

தச்சூரில் இருந்து பொன்னேரி வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வரை நாளை (28 ஆம் தேதி) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

மீஞ்சூர் பகுதியைச் சுற்றியுள்ள துறைமுகங்கள், சரக்கு பெட்டக முனையங்களில் இருந்து ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் மீஞ்சூரில் இருந்து பொன்னேரி வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுசாலை வழியாக செல்கின்றன.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் விபத்துகளில் சிக்குவதும், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையும் உள்ளதால் நாளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தச்சூர் முதல் பொன்னேரி வழியாக மீஞ்சூருக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் நலன் கருதியும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுபாப்பை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். தச்சூர் கூட்டுசாலை மற்றும் மீஞ்சூர் காவல் எல்லையில் 2 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பவர் எனவும், விதிகளை மீறும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு ₹500 முதல் ₹1000 வரை அபராதம் வசூலிக்கப்படும் எனவும், இந்த விதிமுறைகள் நாளை (28 ஆம் தேதி) முதல் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொன்னேரி பழைய பேருந்து நிலையம், தச்சூர் கூட்டுசாலை மற்றும் மீஞ்சூர் வெளிவட்ட சாலை ஆகிய 3 இடங்களிலும் வட்டாட்சியர் செல்வ குமார் அறிவிப்பு பலகைகளை வைத்து கனரக வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.