தமிழ்நாடு

விற்பனைக் கூடத்தில் தேங்கிய 50ஆயிரம் நெல் மூட்டைகள்

webteam

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால்,‌ ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 50ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. 

சம்பா அறுவடை முடிந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விடுமுறை காரணமாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் சுமார் 50,000 நெல் மூட்டைகள் விற்பனைக்கூடத்தில் தேக்கமடைந்துள்ளன. கடந்த ஒருவாரமாகவே எடை போடாமல் உள்ளதால் பனியையும் பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் மூட்டைகளுக்கு பாதுகாப்பாகக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருந்துகின்றனர். தற்காலிகமாகப் பணியாளர்களை நியமித்தோ அல்லது வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு கொள்முதல் அனுமதி வழங்கியோ இந்த நிலையை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.