மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் ஜூலை 27க்கு தீர்ப்பு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
தமிழகத்தில் வழங்கப்படும் மருத்துவப் படிப்புகளுக்கு பிசி, எம்பிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகத் தமிழக அரசு ஒப்படைக்கும் இடங்களில், 50% இட ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு பின்பற்றவில்லை என்ற புகார்கள் எழுந்தன.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்க செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு தரப்பினர்களின் வாதங்களை கேட்ட நீதிபதிகள். இது தொடர்பான தீர்ப்பை ஜூலை 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.