தமிழ்நாடு

”195-ல் 50 குடியிருப்பு பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம்”- அமைச்சர் முத்துசாமி

”195-ல் 50 குடியிருப்பு பகுதி எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழலாம்”- அமைச்சர் முத்துசாமி

webteam

“தமிழகம் முழுவதும் 50 குடியிருப்புகள், மிக மோசமாகவும் எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையிலும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது” என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலனின் சார்பில் கொரோனோவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கொரோனோ சிறப்பு நிதி வழங்குதல் மற்றும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்ர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, 191 பேருக்கு ரூ.1,72,00,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு விட்டது. எனினும் நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும். வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதை எளிமைப்படுத்த ஒற்றை சாளர முறை கொண்டு வரப்படும்/ தமிழகம் முழுவதும் 195 வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 50 மோசமாக எப்போது வேண்டுமானலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதை 2 ஆண்டுகளில் சரி செய்வோம்” எனக் கூறினார்.