தமிழ்நாடு

7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் நேரில் கோரிக்கை

7.5% உள் ஒதுக்கீடு விவகாரம்: ஆளுநரிடம் 5 அமைச்சர்கள் நேரில் கோரிக்கை

webteam

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழக அமைச்சர்கள் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு இதுவரை ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனிடையே ஆளுநரின் முடிவு வரும் வரை மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தது. 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்தால் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 300 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என ராஜ்பவனுக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.