தமிழ்நாடு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் பலி

webteam

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பெண் தொழிலாளர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் வரகனூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு இன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண் தொழிலாளர்கள் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் பட்டாசு ஆலையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெடிவிபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். காயமடைந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருமணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால், தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கும்போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வகை பட்டாசுக்கள் தயாரிக்க அதிக வீரியம் கொண்ட ரசாயணம் பயன்படுத்தப்படுகிறது. 

தீயை அணைக்கும் பணி தீயணைப்பு வீரர்களுக்கு சவால் நிறைந்த ஒன்றாக உள்ளது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத அளவு ரசாயண பட்டாசு மூலப்பொருள்கள் வெடித்து சிதறி வருகின்றன. மேலும் கட்டட இடிபாடுகளில் சிக்கி சிலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.