அருப்புக்கோட்டையில் தீபாவளியை முன்னிட்டு பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கிய, தனியார் பிரியாணி கடை உணவகத்தில் மக்கள் கூட்டம் குவிந்தது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் உணவகத்தில் தீபாவளியை முன்னிட்டு பழைய 5 பைசாவிற்கு பிரியாணி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தை கண்ட அருப்புக்கோட்டை பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 5 பைசா நாணயத்தை தேடிப்பிடித்து கொண்டு வந்தனர்.
அத்துடன் கூட்டமாக வந்து பிரியாணியை வாங்கி சென்றனர். பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் வரிசையில் காத்திருந்து, பிரியாணியை வாங்கிச் சென்றதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
சில முதியவர்கள் கூறும் போது, ஒரு காலத்தில் 5 பைசாவின் மதிப்பு ஒரு சாப்பிட்டின் மதிப்பாக இருந்ததாக கூறிச்சென்றனர்.