தமிழ்நாடு

‘ஆற்றை கடக்க வேண்டாம்’: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

webteam

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு 5-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கேஆர்பி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் தேதி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறை அறிவுறுத்தியது.

தற்போது மீண்டும் அதிகளவு தண்ணீர் செல்வதால், தென்பெண்ணை ஆற்றில் இறங்கவோ, கடந்து மறுகரைக்கு செல்லவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.