Accused pt desk
தமிழ்நாடு

தஞ்சை: இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக 5 பேர் கைது

இலங்கை தமிழர்களுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

webteam

செய்தியாளர் - I.M.ராஜா

-------

பட்டுக்கோட்டை பகுதியில் போலி பாஸ்போர்ட் வழங்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தஞ்சை மாவட்ட குற்றப்புலனாய்வுத் துறை காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆண்டிக்காடு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் போலி பாஸ்போர்ட் விநியோகித்த போது கையும், களவுமாக பிடிபட்டார். அவரிடம் போலி பாஸ்போர்ட் பெற்ற 2 நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

arrest

விசாரணையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் திருச்சி உறையூரை சேர்ந்த சுந்தர்ராஜ், கும்பகோணத்தை சேர்ந்த ராஜூ மற்றும் பக்ருதீனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக 5 பேரை கைது செய்த காவல்துறை, பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். போலி பாஸ்போர்ட் விநியோகம் தொடர்பாக சேதுபாவாசத்திரம் காவல்நிலைய எழுத்தர் சேஷா மற்றும் அவரது உதவியாளரிடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.