வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொரட்டூரில் உள்ள எல்சடாய் பள்ளியில் கீர்த்தனா என்ற மாணவி 4ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இந்நிலையில், தமிழ் வகுப்பு வீட்டுப்பாடம் எழுதாத மாணவியை ஆசிரியை பார்வதி என்பவர், கை மற்றும் காலில் கம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.
இதில் மாணவிக்கு கை மற்றும் காலில் காயம் எற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியை பார்வதி மீது மாணவியின் தந்தை கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளிதுள்ளார்.
இதையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இன்று மாலை இரு தரப்பினரும் விசாரணைக்கு வர வேண்டுமென அழைத்துள்ளனர்.