House pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல்: வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து 47 பவுன் தங்க நகைகள் கொள்ளை

திண்டுக்கல்லில் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள 47 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் நாகல்நகர் ராஜலட்சுமி நகர் 1வது தெருவில் வசித்து வருபவர்கள், ரங்கேஷ் (65) - வசந்தி (59) தம்பதியர். இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி குதித்து அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்தள்ளனர்.

Police station

இதையடுத்து பீரோவில் இருந்த ரூ 15 லட்சம் மதிப்புள்ள 47 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். தூங்கி எழுந்துபின் வசந்தி அறைக்குச் சென்று பார்த்துள்ளார் அப்போது, பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நகை திருடுபோனதை உணர்ந்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.