தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி - 45 நிறுவனங்கள் விருப்பம்

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி - 45 நிறுவனங்கள் விருப்பம்

Sinekadhara

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்க 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.

முன்னதாக, கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கொரோனா தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதன்படி, டிட்கோ என்று சொல்லக்கூடிய தொழில் வளர்ச்சிக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசி, உயிர்காக்கும் மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளைத் தயாரிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் அதற்கான மனுவை அளிக்கலாம் என்றும், அதற்கான கால அவகாசம் மே 31 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு 45 நிறுவனங்கள் விருப்பமனு அளித்துள்ளதாக தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.

இதில் தகுதிவாய்ந்த நிறுவனங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அரசும் தனியாரும் இணைந்து செயல்படக்கூடிய வகையில் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.